பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு!
Firecracker factory accident death toll rises to 10
சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசு தான்,அந்த வகையில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை அதிகமாக உள்ளது .இங்குள்ள பட்டாசுகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது ,தீபாவளி பண்டிகை காலங்களில் சிவகாசி பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கிறது,தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் அங்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிற்து.ஒரு பக்கம் தொழில் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் மறுபக்கம் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.
இந்தநிலையில் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1ம் தேதி காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 50- க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர் .
இந்த நிலையில்அப்போது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி வெடித்து சிதறி உயிரிழந்தனர். சிலர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
English Summary
Firecracker factory accident death toll rises to 10