ஆதார், கைரேகை வைக்கத்தவர்கள் ரேஷன் கார்டுகள் செல்லாதா? உண்மை என்ன?
TN Govt Aadhaar Ration Card
தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் ஆதார், கைரேகை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அவசரமாக அப்டேட் செய்யாவிட்டால், ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்பங்களின் உறுப்பினர்கள், தங்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்வது அவசியம்” என்று கூறப்பட்டுள்ளதுடன், அதற்கான கடைசி தேதி தற்போது வரையறுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளால் பொதுமக்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும், உண்மைத்தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
TN Govt Aadhaar Ration Card