குடிநீர் பிரச்சனை..அதிகாரிகளுடன் MLA வைத்தியநாதன் ஆலோசனை!
Drinking water issue MLA Vaithiyanathan in consultation with the authorities
இலாசுப்பேட்டை தொகுதியில் அசோக் நகர் பாரதியார் சாலை-தொல்காப்பியர் வீதி வழியாக வானவில் பஸ் ஸ்டாப் வரை புதிய குடி நீர் குழாய் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம், குடிநீர் வழங்கல் பிரிவு மற்றும் கழிவு நீர் உட்கோட்டம் ஆகிய துறை சம்பந்தப்பட்ட குறைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இலாசுப்பேட்டை சட்டமன்ற உருப்பினர் அலுவலகத்தில் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது சுகாதாரக் கோட்டம் உதவிப்பொறியாளர் திரு. ஶ்ரீதர், குடி நீர் வழங்கல் பிரிவு உதவிப் பொறியாளர் திருமதி பீனா ராணி, இள நிலைப் பொறியாளர் திரு. நாகராஜ், கழிவு நீர் உட்கோட்ட உதவிப் பொறியாளர் திரு. வைத்திய நாதன், இளநிலைப் பொறியாளர் திரு. ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இலாசுப்பேட்டை தொகுதியில் அசோக் நகர் பாரதியார் சாலை-தொல்காப்பியர் வீதி வழியாக வானவில் பஸ் ஸ்டாப் வரை புதிய குடி நீர் குழாய் அமைத்தல், குறிஞ்சி நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட கீழ் நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீராதாரத்திற்கு புதிய போர்வெல் அமைக்க தகுந்த இடம் பார்ப்பது, டோபிகானா பகுதிக்கு புதியதாக மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து புதிய குழாய்கல் மூலம் குடி நீர் வழங்க ஏற்பாடு செய்வது, ECR சாலையில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு அருகில் புதிய சுத்திகரிக்கப் பட்ட குடி நீர் நிலையம் அமைத்தல் ஆகியவை பற்றியும், ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதி, மடுவுபேட் டோபிகானா பகுதியில் புதியதாக கழிவு நீர் தொட்டிகள் அமைத்தல், கைலாஷ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கழிவு நீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.
English Summary
Drinking water issue MLA Vaithiyanathan in consultation with the authorities