டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா..புகைப்பட கண்காட்சி திறப்பு!
Dr. Shyama Prasad Mukherjee's birthday celebration opening of the photo exhibition
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125 வது பிறந்த நாள் விழா கடற்கரைச் சாலையில் உள்ள நகராட்சி அரங்கில் கொண்டாடப்படப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம். துணை சபாநாயகர் ராஜவேலு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர் (கலை, பண்பாடு) முகமது அஹ்சன் அமித்,ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
English Summary
Dr. Shyama Prasad Mukherjee's birthday celebration opening of the photo exhibition