ஹைதராபாத்தில் அதிர்ச்சி: சாமி புகைப்படத்திற்கு பின்னால் கஞ்சா பதுக்கி வைப்பு: பறிமுதல் செய்துள்ள போலீசார்..!
Man arrested for stashing 10 kg of ganja behind Samis photo in Hyderabad
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் டோல்பேட் பகுதியில் ரோகன் சிங் என்பவரின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் இன்று அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, வீட்டின் பூஜை அறையில் சாமி புகைப்படங்களுக்குப் பின்னே அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளார். இதனை கண்டுபிடித்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாமி படத்திற்கு பின்னே 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ரோகன் சிங்கை அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து, ஐதாராத்தில் விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Man arrested for stashing 10 kg of ganja behind Samis photo in Hyderabad