ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிர்மலா சீதாராமன்..!
Nirmala Sitharaman held talks with the finance ministers of Russia and China on bilateral cooperation.
'பிரிக்ஸ்' (BRICS) நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் ஆலோசனைக் கூட்டம் பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
குறித்த பயணத்தின் ஒரு பகுதியாக ரஷியா மற்றும் சீனாவின் நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதன்போது இந்தியா-சீனா மற்றும் இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
-d2rvl.png)
நிர்மலா சீதாராமன் ரஷ்ய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவை சந்தித்த போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இந்தியா-ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சீன நிதி அமைச்சர் லான் போனுடன் நிதியமைச்சர் நிர்மலா இடையிலான சந்திப்பின் போது, இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளனர். மேலும், உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக இரு நாடுகளும் இருப்பதால், உள்ளார்ந்த உலகளாவிய வளர்ச்சி மற்றும் புதுமைகளை அடையக் கூடிய நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன என்று நிர்மலா சீதாராமன்கூறியுள்ளார்.
அடுத்ததாக, இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nirmala Sitharaman held talks with the finance ministers of Russia and China on bilateral cooperation.