வல்லரசுகளின் சர்வாதிகார போக்கு: எப்போது வேண்டுமானாலும் உலக போர் நடக்க வாய்ப்புள்ளது: எச்சரிக்கும் நிதின் கட்கரி..!
Nitin Gadkari warns that world war could break out at any time due to the dictatorship of superpowers
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அங்கு அவர் குறிப்பிடுகையில், வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவை மறைத்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இஸ்ரேல், ஈரான் மற்றும் ரஷியா, உக்ரைனுக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது என்றும், இதனால் எந்த நேரத்திலும் உலகப் போர் நிகழும் வாய்ப்புள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த போரின் போது பெரும்பாலும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றதால், கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளதாகவும், குறித்த பிரச்சினைகள் அனைத்தையும் உலக அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் மெதுவாக அழிவுக்கு இட்டுச் செல்கின்றதாகவும், வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவை மறைத்து வருகின்றன என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nitin Gadkari warns that world war could break out at any time due to the dictatorship of superpowers