தமன்னாவுக்கு கன்னட அமைப்புக்கள் எதிர்ப்பு: பிரபல சோப்பு வரலாறு காணாத விற்பனை..!
Popular soap sees record sales amid opposition from Kannada organizations to Tamannaah
கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் மைசூரு சாண்டல் சோப்பு வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.
அதன்படி, தமன்னாவுக்கு 02 ஆண்டுகளுக்குரூ.6.20 கோடி சம்பளம் வழங்க அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதற்கு கன்னட அமைப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. குறித்த ஒப்பந்தத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கூறின. அத்துடன், சமூக வலைதளங்களில் கன்னடர்கள் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தனர்.
-kz3mg.png)
இந்நிலையில், கர்நாடக தொழில்துறை அமைச்சர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது: எம்.பி.பட்டீல் மைசூரு சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 03 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நடிகை தமன்னாவை நியமிப்பதற்கு முன்பு நாங்கள் கன்னடரான நடிகை தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரிடமும் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், தீபிகா படுகோனே வேறு பிரசார நிகழ்வுகளில் தீவிரமாக உள்ளார். மற்ற நடிகைகள் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளில் விளம்பர தூதர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதனால் சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் விளம்பர தூதராக நியமித்துள்ளோம் என்று பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரங்களுக்கு மத்தில் மைசூர் சாண்டல் சோப்பு பிராண்ட், மே மாதத்தில் வரலாறு காணாத விற்பனையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இந்த பிராண்ட் ரூ.186 கோடி விற்பனை செய்து, ஒரே மாதத்தில் மிக உயர்ந்த விற்பனை சாதனையைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Popular soap sees record sales amid opposition from Kannada organizations to Tamannaah