ஆலங்குளத்தில் துணிகர கொள்ளை சம்பவம்: ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை ரூ.75 ஆயிரம் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை..! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், ஆலங்குளம், பரும்புநகர் பகுதியில் 25 சவரன் நகைககள் மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம், பரும்புநகர் பகுதி சேர்ந்த திலீப்குமார் மற்றும் அவரது அப்பாவின் வீடுகளும் அருகருகே உள்ளன. திலீப்குமாரின் மனைவி ஈகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திலீப்குமாருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை கிடைத்ததால் தனது மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் உள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் சொந்த ஊரில் நடந்த திருவிழாவுக்காக திலீப்குமார் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டின் பீரோவில் மனைவி ஈகாவின் நகைகளை வைத்துவிட்டு மீண்டும் குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அறிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 02-ஆம் தேதி இரவில் திலீப்குமார் வீட்டின் மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

திலீப்குமார் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 சவரன் நகைகளையும், ரூ.75 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திலீப்குமாரின் வீட்டின் மாடி கதவு திறக்கப்பட்டு இருப்பதை அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் உள்ள அப்பா பார்த்துள்ளார். உடனடியாக மகனின் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். 

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்ததோடு, அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 சவரன் நகை மற்றும் ரூ.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொகாள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து அரங்கேறிய இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police nab mysterious persons who stole 25 sovereigns worth Rs 75000 from a teacher's house in Alankulam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->