பூனைக்காக தன் சொத்தை கொடுக்க முடிவெடுத்த சீனா முதியவர்! இணையத்தில் வைரலாகும் முதியவரின் பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


சீனா நாட்டைச் சேர்ந்த லாங் என்ற 82 வயது முதியவர் ஒருவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

இந்த 4 பூனைகளில் 'சியான்பா ' என்ற பூனை மட்டுமே அவருடன் இன்னமும் உள்ளது. இதில் தான் உயிரிழந்த பிறகு, இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை இணையத்தில் தேடி வருகிறார்.

இந்த நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தான் வளர்த்த பூனைக்காக தனது சொத்தை இழக்க தயாராகும் இவரின் மனத்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இவரது முடிவு கண்டு தற்போது இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old Chinese man decided to give up his property for a cat sensational news old man is going viral internet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->