கோவை இந்துக்கோவில் சேதப்படுத்தல் விவகாரம்.. ஸ்டாலின் திடீர் கொந்தளிப்பு.!! - Seithipunal
Seithipunal


கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலின் காரணமாக தமிழகத்தில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறவிருந்தது. முருகனின் கந்தசஷ்டி கவசத்தை விமர்சனம் செய்த கூட்டம் காவல்துறை பாதுகாப்புடன் சிறையில் அடையாள மாற்றத்துடன் கம்பிஎண்ணிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களின் பேச்சில் உள்ள விசமத்தால் பல சம்பவங்கள் நடைபெற துவங்கியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு காவிசாயம் ஊற்றி பிரச்சனை ஆனது.. ஆனால், முருகனை இழிவுபடுத்தியதற்கு குரல் கொடுக்காத பலரும் பெரியாரின் சிலை அவமதிப்பிருக்கு பொங்கியெழுந்து போராட்டம் நடத்தினர். இந்திய அளவிலெல்லாம் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இறுதியாக கண்துடைப்பு கண்டனம் முருகன் விஷயத்தில் திமுக தெரிவித்தது.

இதற்குப்பின் கோவையில் இருக்கும் மூன்று ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் துவக்கத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி துவக்கத்தில் எந்த விதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இதனையடுத்து இணையத்தில் நெட்டிசன்கள் இது குறித்து கடுமையான விமர்சனம் தெரிவித்து வந்தனர். 

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்ய வேண்டும் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Stalin Condemned about Hindu temple got damaged in Coimbatore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->