#ராணிப்பேட்டை || பொதுமக்கள் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலைவெறி தாக்குதல்..!!
DMK panchayat president attack on public
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ஏ.கே முருகன் என்பவர் இருந்த வருகிறார். திமுக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் இவருக்கும் அதே ஊராட்சிக்கு உட்பட்ட லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கும் இடையே காஞ்சனகிரி கோயில் நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லாலாபேட்டை சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே திமுக ஊராட்சி மன்றம் தலைவருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்களின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு லாலாபேட்டை கிராமத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சிக்காக திமுக ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் ஏ.கே முருகன் சென்றுள்ளார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது ஆதரவாளருடன் பொதுமக்களை கடுமையாக தாக்கிவிட்டு தனது சொந்த கிராமமான அக்ரவாரத்திற்கு திரும்பி உள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பொழுது இவரின் சொந்த ஊரான அக்ராவரம் கிராமத்தில் வழிமறித்து ஆம்புலன்ஸில் இருந்த பொதுமக்கள் மீது தனது ஆதரவாளர்கள் மற்றும் மகன்கள் உடன் சேர்ந்து மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
DMK panchayat president attack on public