சோகம் மேல் சோகம்.. மனைவி உடல்நல குறைவால் இறக்க, மகன்-மருமகளை இழந்த திமுக எம்.எல்.ஏ.! - Seithipunal
Seithipunal


ஓசூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஒய். பிரகாஷ். இவருக்கு கருணா சாகர் என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலம் குன்றி இருந்த எம்.எல்.ஏ பிரகாஷின் மனைவி இயற்கையை எய்தினார். 

இந்நிலையில், இந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் எம்.எல்.ஏ பிரகாஷின் மகனும், மருமகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். கருணா சாகர், அவரது மனைவி பிந்து உட்பட 7 பேர், கருணாவின் ஆடி சொகுசு காரில் பெங்களூரில் இருந்து ஓசூர் திரும்பியதாக கூறப்படுகிறது. 

பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியருகே வருகையில், அதிவேகத்தில் காரில் பயணம் செய்த இவர்களின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில், கருணா சாகர், பிந்து உட்பட காரில் பயணம் செய்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரை கருணா இயக்கியது உறுதியான நிலையில், அவர் மதுபோதையில் இருந்தாரா? என பெங்களூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த சோகத்தால் திமுக எம்.எல்.ஏ ஒய். பிரகாஷ் பெரும் சோகத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அவரது குடும்பத்தினரும் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Krishnagiri MLA Y Prakash Son and Daughter in Law Including 7 Died Accident Recently MLA Wife Died


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal