தி.மு.க கொடியுடன் வந்த காரில் போதைப்பொருட்கள்: கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், திருவையாறு பகுதியில் தி.மு.க கொடி கட்டிய காரில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் ரூ. 3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். 

தஞ்சாவூர், திருவையாறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்று அவ்வழியாக வந்தது. இதனை பார்த்த போலீசார் சோதனை செய்வதற்காக காரை நிறுத்தியுள்ளனர். 

அந்த காரில் இருந்த 2 வட மாநில இளைஞர்களை பார்த்து போலீசார் சந்தேகம் அடைந்து காரை சாதனை செய்தபோது காரின் இருக்கையின் அடியில் சுமார் 700 கிலோ ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து போலீசார் கிடைத்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் ராஜஸ்தான், ஜின்பூர் பகுதியைச் சேர்ந்த வஸ்னா ராம் (வயது 28), சிம்பா ராம் (வயது 25) என்பது தெரிய வந்தது. 

மேலும் இவர்கள், எந்த மாநிலத்திற்கு போதைப்பொருட்களை எடுத்துச் சென்றாலும் அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியின் கொடியை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் பயன்படுத்திய கார் மன்னார்குடியைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகரின் கார் என்பதால் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK flag with car Trafficking drugs North state youth arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->