தி.மு.க. கவுன்சிலர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகார்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நீலகிரி, ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள ஏராளமான கடைகளை இடித்துவிட்டு புதியதாக கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த கட்டுமான பணிக்காக ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற ஊட்டி மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் கடைகள் கட்டுவது தொடர்பாக நகராட்சி துணை தலைவர் மற்றும் தி.மு.க கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

நகராட்சி துணை தலைவர் ரூ. 36 கோடி பெற்றதாக தி.மு.க கவுன்சிலர் கூட்டத்தில் பேசியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டு தவறான தகவலை பரப்பியதாக தெரிவித்து கவுன்சிலர் ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து தி.மு.க கவுன்சிலர் தெரிவித்திருப்பதாவது, நகராட்சியில் கடைகள் கட்டுவது தொடர்பாக மட்டுமே பேசினேன். வேறு எதையும் பேசவில்லை. 

ஆனால் நகராட்சி துணை தலைவர் ரூ. 36 கோடி பெற்றதாக நான் பேசியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தவறான தகவலை தெரிவித்துள்ளார். 

இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Councilor complaint against BJP leader Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->