சொன்னெப்படியே நடந்துடுச்சு! அடுத்து கொடநாடு வழக்கு தான் - CM ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
DMK CM MK Stalin ADMK EPS Pollachi Kodanadu case
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நாளைத் தொடங்குகிறது.
இந்த விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கவுள்ளார். ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ள முதல்வர், மனைவி துர்காவுடன் மலையாட்சி மேம்பாட்டு திட்ட அரங்கில் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வ ஸ்டாலின் தெரிவித்தாவது, "2019 தேர்தலின்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என உறுதியுடன் சொன்னேன்.
அது எந்தவொரு செல்வாக்குடையவரின் பிள்ளையாக இருந்தாலும் அவை பொருந்தும். தற்போது, அந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற்றிருப்பது, நாம் கூறியதை செயலில் நிரூபித்துவிட்டோம்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நாம் உறுதி செய்து செயல் பூர்வமாக செயல்படுகிறோம்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்கள் பேசுகிறார். எதற்காக எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தார்? என்பதற்கான காரணம் நாட்டிற்கே தெரியும். நாளை அவர் சொல்வதைக் கேட்டுப் பார்ப்போம்," என்றார்.
English Summary
DMK CM MK Stalin ADMK EPS Pollachi Kodanadu case