திண்டுக்கல் அருகே பேருந்தில் தவறவிட்ட பணம்! போலீசாரின் செயலால் மகிழ்ச்சி!
Dindigul bus missed money
ஈரோடு மாவட்டம்: அந்தியூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி நாகஜோதி (வயது 30). இவர் மதுரையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர் மற்றொரு பேருந்தில் ஏறிய போது பணப்பை மற்றும் கைபேசியை மறந்து முந்தைய பேருந்தில் விட்டது தெரிய வந்துள்ளது.
ஆனால் அதற்குள் பேருந்து புறப்பட்டு விட்டதால் நாகஜோதி, வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். போலீசார் இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அஞ்சலி ரவுண்டானா அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது நகர போக்குவரத்துக் காவலர் அந்த பேருந்து வழிமறித்து சோதனை செய்தார். அப்போது அந்த பேருந்தில் பணத்தை மற்றும் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அதனை நாகஜோதி இடம் போலீசார் ஒப்படைத்தனர். தவற விட்ட பணம் மீண்டும் கிடைக்குமா என சந்தேகத்தில் கதறி அழுத்த நாகஜோதி, போலீசாரால் கிடைக்கப்பெற்றது குறித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
English Summary
Dindigul bus missed money