தருமபுரி : 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை  - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


தருமபுரி : அரசு நெல் கிடங்கில் 7,000 டன் நெல்மூட்டைகள் மாயமாகவில்லை. மாயமானதாக பரவும் வரும் செய்தி தவறானது என்று, மாவட்ட ஆட்சியர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்கு பின்புறம் திறந்தவெளி அரசு நெல் குடோன் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நெல் குடோனுக்கு தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்கு ரயில் மூலம் நெல் கொண்டுவரப்பட்டு, பின்னர் லாரிகள் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள நெல் அரவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது.

இப்படியான இந்த திறந்தவெளி நெல் குடோனில், அண்மையில் 7000 டன் நெல் மூட்டைகள் திருடு போய்விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் குழு, இந்த திறந்தவெளி நெல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்கள்  சந்தித்த மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவிக்கையில், "7000 டன் நெல் முட்டைகள் மாயமானதாக வெளியாகும் செய்தி தவறானது. இந்த செய்தி குறித்து முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

மாவட்டத்தின் பல்வேறு நெல் அரவை மில்களுக்கு நெல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த தணிக்கை மற்றும் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் இந்த நெல் குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயமாவதற்கு வாய்ப்பு இல்லை.

சில நெல் மூட்டைகள் சரிந்து விழுந்துள்ளது. அதன் கணக்கெடுக்கும் பணி நடைபெற்ற வருகிறது" என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri paddy robbery issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->