தர்மபுரி : விவசாயின் காதை கடித்து துப்பிய கும்பல்.! தலைமறைவான இரு பெண்களை தேடும் போலீசார்.!
Dharmapuri kottavir farmer attack
தருமபுரி மாவட்டம் : காரிமங்கலம் அருகே உள்ள எச்சணம்பட்டி கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயம் செய்துவரும் இவருக்கும், இவரின் நிலத்தின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் வெள்ளையன் குடும்பத்தினருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
பின்னர், சர்வேயர் மூலம் நிலம் அளக்கப்பட்டு இரு நிலங்களுக்கும் இடையே எல்லைகள் போடப்பட்டதால் சிறிதுகாலம் அமைதி நிலவியது.
இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்று மீன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாரிமுத்துவை தாக்கி உள்ளனர்.

மேலும், விவசாயி மாரிமுத்துவின் காதை கும்பலில் ஒருவர் கடித்து துப்பியுள்ளனர். மரண வலி தாங்க முடியாமல் மாரிமுத்து சத்தம் போட்வே, வெள்ளையன் தனது குடுமத்துடன் தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து, மருதுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளையன் மகன் லட்சுமணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வெள்ளையன் மனைவி தனபாக்கியம், உறவினர் சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.
English Summary
Dharmapuri kottavir farmer attack