தர்மபுரி | மின்சாரம் தாக்கி தாய், மகன் உள்பட 3 பேர் பலி!
Dharmapuri electrocution due to 3 peoples died
காரிமங்கலத்தில் தாய், மகன் மற்றும் உறவினர் என மூன்று பேர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி: காரிமங்கலம் அருகே உள்ள ஓடைச்சக்ரை பகுதியைச் சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 60). அவரது மகன் பெருமாள் (வயது 33).
இவரது வீட்டின் அருகே துணிகளை உணர்த்தும் கம்பியில் பாய்ந்த மின்சாரத்தில் சிக்கிக்கொண்ட தாயை காப்பாற்ற சென்ற அவரது மகன் பெருமாள் மற்றும் அவரது உறவினர் சரோஜா என மூவரும் மின்சாரம் தாக்கி அடுத்த உயிரிழந்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Dharmapuri electrocution due to 3 peoples died