தருமபுரியில் முதல்வர்! கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாம் தொடக்கம்!
Dharmapuri cm MK Stalin received
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்ய 35 ஆயிரம் 923 முகாம்கள் நடைபெற உள்ளன.
இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முகாமினை தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இதற்காக இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு சென்றார். காவல்துறை சார்பில் விமான நிலையம் முன்பு நடந்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
விமான நிலையத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் அவருக்கு பூங்கொத்தும், புத்தகம் கொடுத்தும் வரவேற்றனர்.
மேலும் முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க பட்டத்தை அடுத்து, முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.
முதலமைச்சரை வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் சேலம் காவல் கமிஷனர்கள் தலைமையில், விமான நிலையத்தில் இருந்து தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பலத்த காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
English Summary
Dharmapuri cm MK Stalin received