தருமபுரி | மின்கசிவால் எரிந்து சாம்பலாகிய 7 லட்சம்!
Dharmapuri 7 lakh burnt to electric leakage
ஏரியூர் அருகே மின்கசிவின் காரணமாக வீட்டில் இருந்த அனைத்து பொருட்களுக்கு எரிந்து சாம்பலானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது:
தருமபுரி மாவட்டம்: ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரலஅள்ளி கிராமத்தை செர்ந்தவர் கோபால். இவரது மனைவி விஜயா (வயது55). கோபால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். விஜயா நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றுள்ளார்.
நேற்று மதியம் திடீரென, அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அங்கு வீட்டில் இருந்த பொருட்களில் தீ பற்றி எறிந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைப்பதற்குள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகின.
மேலும் பீரோவில் இருந்த ரூ. 7 லட்சம், 2 பவுன் தங்க நகை, வீட்டின் பட்டா, மற்றும் அவரது பேரக் குழந்தையின் சான்றிதழ்கள் போன்றவை அனைத்தும் எரிந்த நிலையில் இருந்தன.
இது குறித்து தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த விஜயா இதனை பார்த்து கதறி அழுதார். பின்னர் தீ விபத்து குறித்து சோதித்த போது, விஜயாவின் வீட்டின் அருகே தாழ்வான மின் கம்பி செல்வதால் மின் கசிவின் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தெரிய வந்தது.
இதனால் கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள தாழ்வான மின் கம்பிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Dharmapuri 7 lakh burnt to electric leakage