காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் சென்ற ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012 ஆம் ஆண்டு மத்திய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கர்களை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது எனவும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்து வாகனங்களில் போலீஸ் சென்ற ஸ்டிக்கரை  பயன்படுத்தக்கூடாது எனவும் அலுவலக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DGP Sylendra Babu New Order for Police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->