ஓபிஎஸ் தலையில் விழுந்த இடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை!
Devar Kavasam Case Chennai HC Order
வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டது.
இந்த தங்க கவசம் குருபூஜையின் போது முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் பாதுகாக்கப்படும்.

அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் பெறப்படும். கடந்தாண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அதிமுக நிர்வாகிகள் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதன்படி, தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று திண்டுக்கல் சீனிவாசன், உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்துள்ளது.
English Summary
Devar Kavasam Case Chennai HC Order