ஆந்திராவுக்கு பறந்த காரை விரட்டிய அதிகாரிகள்.!! காத்திருந்த பேரதிர்ச்சி.!!
Customs officers arrested a man who smuggled gold to Andhra Pradesh
ஆந்திராவில் தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து கார் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விஜயவாடா அருகே போலப்பள்ளி சுங்கச்சாவடியில் சுங்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை மடக்கி சோதனைய முயன்ற போது கார் நிறுத்தாமல் சென்றதால் விரட்டுச் சென்று மடக்கி பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை ஒருவர் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
அவரிடமிருந்து 4 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் மற்றும் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருடைய வீட்டிலிருந்து 6 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் கடத்தல் தங்கம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Customs officers arrested a man who smuggled gold to Andhra Pradesh