CUET நுழைவு தேர்வு கட்டாயமில்லை - யுஜிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal



மத்திய அரசின் பல்கலைக்கழகங்களுக்கான பிஜி நுழைவு தேர்வை (சியூஐடி - CUET) 2 பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்த நிலையில், இந்த தேர்வு கட்டாயமில்லை என்று, யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் படிப்புகளுக்கான முதுநிலை படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் நாற்பத்தி இரண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் விருப்ப படக்கூடிய அனைத்து தனியார் பல்கலைக்கழகங்கள் கூட இந்தக் CUET என்கின்ற மத்திய நேரடி நுழைவுத் தேர்வை நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இந்த CUET நுழைவுத்தேர்வை ஏற்கப் போவதில்லை என்று அறிவு உள்ளன. மேலும் ஏற்கனவே அந்த பல்கலைக்கழங்களில் நடக்கக்கூடிய நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த போவதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் யுஜிசி அளித்துள்ள விளக்கத்தில், "CUET நுழைவுத் தேர்வை பொருத்தவரை கட்டாயமில்லை. விருப்பப்படியே மத்திய பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தேர்வு எழுதும்போது, ஒரு மாணவர் மூன்று பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்தார்கள் என்றால்., 3 வகையான தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறது. அவை அனைத்துக்கும் ஒரே தீர்வாக அமையும் பட்சத்தில் தான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

எனவே இந்தத் தேர்வை விரும்பக்கூடிய பல்கலைக்கழகங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். இது அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கட்டாயமில்லை" என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CUET Exam issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->