வைரல் வீடியோவின் வலி முடிவு: பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சிக்கிய தீபக் தற்கொலை...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபர் தீபக். துணைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த இவர், தனது வேலை தொடர்பாக கடந்த 15-ம் தேதி கண்ணூருக்குச் சென்றுள்ளார். பையனூரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவை ஷிம்ஜிதா முஸ்தபா என்ற இளம்பெண், தீபக்கிற்கு தெரியாமல் தனது மொபைலில் செல்ஃபி முறையில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதோடு, தீபக் மீது கடும் விமர்சனங்கள், வசைபாடுதல்கள் மற்றும் சமூக ஊடக “விசாரணைகள்” வெடித்துக் கிளம்ப காரணமாக அமைந்தது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் எந்த அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கப்படாமல், வீடியோ நேரடியாக ஆன்லைனில் அப்லோட் செய்யப்பட்டது என்பதே முக்கியமாக பேசப்படுகிறது.இந்த சூழலில், தன் மீது விழுந்த கடும் பழி மற்றும் சமூக அவமானத்தை தாங்க முடியாமல் தீபக், மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தீபக்கின் மரணத்தைத் தொடர்ந்து, வீடியோவை பரப்பிய பெண் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, காவல்துறையினர் “இயற்கைக்கு மாறான மரணம்” என வழக்கு பதிவு செய்தனர்.

ஆனாலும், சம்பந்தப்பட்ட பெண் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தீபக்கின் குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்த நிலையில்,
“FAKE VIDEO வெளியிட்டாரா இளம்பெண்..?
அவமானத்தில் இறந்த நபர்! என்ன நடந்தது?”
என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக எழுந்தன.
இதனிடையே, பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சிக்கிய தீபக் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, வீடியோவை வெளியிட்ட பெண் தான் தவறு என்றும், விளம்பரத்திற்காக இந்தச் சம்பவத்தை திட்டமிட்டு உருவாக்கியதாகவும் தீபக்கின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மேலும், அந்தப் பெண் குறித்தும், வெளியிடப்பட்ட வீடியோவின் பின்னணி குறித்தும் விரிவான, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அணுகப்போவதாக தீபக்கின் பெற்றோர் அறிவித்தனர்.

இந்த சூழலில், மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் அளித்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு, பேருந்தில் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உயிரிழந்த தீபக் மரணம் குறித்து, டிஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சமீபத்திய தகவல்களின்படி, வீடியோவை வெளியிட்ட பெண் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

painful end viral video Deepak commits suicide after being accused harassment


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->