சிரிப்பலை! ‘தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் சர்ச்சை வசனத்துக்கு விளக்கம்...! - ஜீவா ஓபன் டாக் - Seithipunal
Seithipunal


‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படம், ஒரு திருமணத்தின் பின்னணியில் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், படக்குழுவினர் பல்வேறு ஊர்களில் திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு ஊரில் நடைபெற்ற தியேட்டர் விசிட் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா, படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.அந்த வசனம், கரூர் துயர சம்பவத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீருடன் பேசிய,“படிச்சு படிச்சு சொன்னனேடா, கண்டிஷன்ஸ் பாலோ பண்ணுங்கடா பண்ணுங்கடான்னு… கேட்டீங்களா?”என்ற டயலாக்கை ஒத்ததாக இருப்பதாக ரசிகர்கள் கவனித்திருந்தனர்.

இந்த வசனம் சிலரிடம் கைதட்டலையும் பெற்றதோடு, சில தரப்புகளில் விமர்சனத்தையும் சந்தித்தது.இதற்கு பதிலளித்த ஜீவா,“இப்போ டிரெண்டிங் ஆக இருக்கிற விஷயங்களை காமெடி கான்டெண்ட்டுக்குள் கொண்டு வருவது இயல்பான விஷயம் தான். அந்த இடத்துக்கு இந்த டயலாக் சரியாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னார்.

நானும் அதை கொஞ்சம் வெகுளியாக பேசி விட்டேன். மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது,”என்று விளக்கம் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wave laughter Explanation controversial dialogue film Thalaivar Thambi Thalaivil Jeeva open talk


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->