வரலாற்றுத் திருப்பம்...! 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராகில் இருந்து அமெரிக்க படைகள் முழு வெளியேற்றம்...!
historic turning point Complete withdrawal American troops from Iraq after 23 years
சுமார் 23 ஆண்டுகளாக நீடித்த அமெரிக்க ராணுவ இருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈராக் ராணுவ தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. இது மத்திய கிழக்குப் அரசியல் மேடையில் ஒரு வரலாற்றுத் திருப்பமாக பார்க்கப்படுகிறது.கடந்த 2003-ம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்தும் நோக்கில் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது.
அந்த காலகட்டத்தில் ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் அமைந்துள்ள அயின் அல் அசாத் விமானப்படைத் தளம் அமெரிக்கப் படைகளின் முக்கியத் தளமாக மாறியது. இந்த விமானத் தளத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

2023-ம் ஆண்டு முதல் ஈராக் அரசாங்கம் அமெரிக்காவை வெளியேற அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்தில் இருந்த படைகளின் எண்ணிக்கையை அமெரிக்க இராணுவம் படிப்படியாக குறைத்து வந்தது.
இந்நிலையில், தற்போது அந்த விமானத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ராணுவ அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.மேலும், இனிமேல் அமெரிக்காவுடனான ஈராகின் உறவு நேரடி ராணுவ தலையீடாக இல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அடிப்படையிலான உறவாக மட்டுமே தொடரும் என ஈராக் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு அரசியல் வட்டாரங்களில் புதிய சமநிலையை உருவாக்கும் முக்கிய முடிவாக கருதப்படுகிறது.
English Summary
historic turning point Complete withdrawal American troops from Iraq after 23 years