கிரீன்லாந்து வேண்டும்… இல்லையெனில் 10% வரி...! - டிரம்ப் புதிய மிரட்டல் - Seithipunal
Seithipunal


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீப காலமாக உலக அரசியல் மேடையை உலுக்குமளவுக்கு தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகளுக்கு கடும் வரி விதிப்புகளை அறிவித்து வந்த அவர், எண்ணெய் வளம் செழித்து விளங்கும் வெனிசுலாவை நேரடியாக இலக்காகக் கொண்டு செயல்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த முடிவின் விளைவுகள் முழுமையாக வெளிப்படுவதற்குள், வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்களை அமெரிக்கா கொள்முதல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின்னர், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிப்பேன் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து மீண்டும் உலக சந்தையை அதிர வைத்தார்.

இதே வேகத்தில், இப்போது அவர் கிரீன்லாந்து மீது தனது பார்வையை திருப்பியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் பெரும் ராணுவ வலிமையுடன் உள்ள ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு மூலோபாய ரீதியாக மிகவும் அவசியம்” என தெரிவித்தார்.

அதனால், அந்த சுயாட்சி பிராந்தியத்தை அமெரிக்காவுக்கு விற்க வேண்டும் என டென்மார்க்கை அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.ஆனால், இந்த யோசனைக்கு டென்மார்க்கும் நேட்டோ கூட்டணி நாடுகளும் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளன. பல ஐரோப்பிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும், “அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவை.

இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்பேன்” என டிரம்ப் மிரட்டலான தொனியில் கூறியிருப்பது ஐரோப்பிய தலைநகரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப் மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 1-ந்தேதி முதல் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பேன் என அவர் அறிவித்தார். இந்த வரி விதிப்புகள் டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.

டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேறும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். “இந்த வரி விதிப்பு அச்சுறுத்தல்களை தொடர்வீர்களா?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதில் நான் 100 சதவீதம் உறுதியாக இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார்.

ஆனால், “கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாதுகாப்புப் படைகளை அனுப்புவீர்களா?” என்ற கேள்விக்கு டிரம்ப் நேரடியாக “இல்லை” என பதிலளித்துள்ளார். இதனால், நேரடி ராணுவத் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் டிரம்ப் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனினும், இங்கிலாந்து மற்றும் நேட்டோவின் பிற ஏழு உறுப்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்பது உறுதியான முடிவாகவே இருக்கும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Greenland wanted otherwise 10percentage tax Trump new threat


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->