காதலர் தின திருமணமா...? தனுஷ்-மிருணாள் தாகூர் வதந்திக்கு முற்றுப்புள்ளி...! - பாலிவுட் இயக்குநர் அதிரடி தகவல்
Valentine Day wedding rumors Dhanush and Mrunal Thakur come end shocking revelation Bollywood director
தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் தனுஷ், கோலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகம் மற்றும் பாலிவுட் வரை தனது நடிப்புத் திறமையை விரித்துள்ளார். 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த அவர், அந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனால், 2024-ம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களது திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக தனுஷ் – பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வலம் வந்தன.

சில பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாகக் காணப்பட்டதும், ஒரு பேட்டியில் மிருணாள் தாகூர் “தனுஷ் என் மிக நெருங்கிய நண்பர்” என்று கூறியதும் இந்த வதந்திகளுக்கு தீப்பொறி போட்டது.
இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி தனுஷும் மிருணாள் தாகூரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரபரப்பாக வெளியானது. வட இந்திய ஊடகங்களிலும் இது ஹாட் டாப்பிக்காக மாறிய நிலையில், இதுபற்றி இருவரும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காதது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது.
“உண்மையிலேயே கல்யாணமா?” என்ற கேள்வி திரையுலக வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.இந்த வதந்திகளுக்கு தற்போது பிரேக் போட்டுள்ளார் தனுஷுக்கு மிகவும் நெருக்கமான பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர். இது குறித்து ஒரு ஆங்கில செய்தி ஊடகத்திடம் அவர் தெரிவித்ததாவது,“தனுஷ் இப்படியொரு திருமணம் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை.
நாங்கள் தினமும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் திருமணம் செய்துகொள்வார் என்று நம்ப முடியவில்லை.விவாகரத்து முடிவுக்கு வந்தபோது, மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் எப்போதும் சேர்ந்து இருப்போம் என்று தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவு செய்தார்கள்.
தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதற்கு முக்கிய காரணம், தனது மகன்களுக்கு சித்தியாக ஒருவரை கொண்டு வர அவர் விரும்பவில்லை.தனுஷ் – மிருணாள் தாகூர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்பது உண்மை. ஆனால் அது திருமணமாக மாறும் என்று சொல்ல முடியாது” என்று அந்த இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
Valentine Day wedding rumors Dhanush and Mrunal Thakur come end shocking revelation Bollywood director