கடலூரில் கொடூரம்: பெற்ற மகளை நிர்வாணமாக்கி தந்தை... பெரும் அதிர்ச்சியில் மக்கள்!
Cuddalore Kattumannarkovil Child Abuse
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே பெற்ற மகளை தந்தையே, நிர்வாணமாக்கி பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார்கோயில் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38 வயது). சுரேஷுக்கு மனைவி, 11 வயது மகள் உள்ளார்.
மது போதைக்கு அடிமையாகிய சுரேஷ், தனது மனைவி, மகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
சம்பவம் நடந்த அன்று, 11 வயது சிறுமி வீட்டில் நிர்வாணமாக அழுதுகொண்டே கிடப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது சிறுமி, தந்தையான சுரேஷ் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளை தந்தை தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Cuddalore Kattumannarkovil Child Abuse