கடலூரில் அமைச்சரை சுத்துப்போட்ட விவசாயிகள்! வேறு வழியே இல்லாமல் பைக்கில் சென்று பார்வை!
Cuddalore farmers and DMK Minister MRKP
கடலூரில் நேற்று சூறைக்காற்றுடன் வீசிய கனமழையால், விவசாயிகள் பயிர் செய்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை காணச் சென்ற திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் : ராமாபுரம், எம் புதூர், சத்திரம், அன்னவள்ளி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்தில் பயிர் செய்யப்பட்ட வாழைப்பயிர்கள் நீற்று அடித்த சூறைக்காற்றில் அடியோடு சாய்ந்து சேதமாகின.

ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.
தமிழக அரசு இந்த சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வேண்டும் என்று, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்.

பெயருக்கு ஏதோ ஒரு சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு அமைச்சர் தனது காரில் புறப்பட்டபோது, அவரை சுற்றி வளைத்த விவசாயிகள், தங்களது பகுதிகளையும் பார்வையிட வேண்டும், உரிய இழப்பீடு தர வேண்டும், உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும். ஒரு இடத்தை மட்டும் பார்த்துவிட்டு செல்வது நியாயம் இல்லை. தங்களது பகுதிக்கும் வந்து பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து விவசாயி ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்ற இடங்களையும் பார்வையிட்டார்.
English Summary
Cuddalore farmers and DMK Minister MRKP