காப்பாற்ற வந்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்...! - தேனீக்கள் கொட்டியதில் தனியார் ஊழியர் உயிரிழப்பு...!
cruelty that befell father who came save him Private employee dies after being stung by bees
திருப்பத்தூர் அருகிலுள்ள அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (42). சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மனைவி சண்முகப்பிரியா (39), மகன் சித்தார்த் குகன் (9) ஆகியோருடன் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

இவர்களுக்கு சொந்தமான மாந்தோப்பு, திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது, திடீரென கூட்டமாக இருந்த தேனீக்கள் சிறுவன் சித்தார்த் குகனை கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மகனை காப்பாற்றும் நோக்கில் வினோத்குமார் மற்றும் சண்முகப்பிரியா விரைந்து சென்ற நிலையில், அவர்களையும் தேனீக்கள் சூழ்ந்து கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூவரும் பலத்த காயமடைந்து மயங்கி சரிந்தனர்.அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தேனீக்களை விரட்டியடித்து, மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வினோத்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.மேலும் சண்முகப்பிரியா மற்றும் சிறுவன் சித்தார்த் குகன் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
cruelty that befell father who came save him Private employee dies after being stung by bees