கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தவேண்டும்..டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
COVID 19 infection prevention measures should be intensified TTV Dinakaran emphasizes
ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 50க்கும் அதிகமானோருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் குறைந்தது தான் என்றாலும் கடந்த காலங்களில், ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்குஅவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டுகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ,அதே நேரத்தில் பொதுமக்களும் கொரோனா தொற்று தடுப்பு தொடர்பாக அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .
English Summary
COVID 19 infection prevention measures should be intensified TTV Dinakaran emphasizes