பெட்ரோல் போட இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்.! மாவட்ட ஆட்சியர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போட வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று, வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று, வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு நேரடியாக சென்றார். அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது, பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் போடும் வரும் நபர்கள் தடுப்பூசி செலுத்து கொண்டார்களா? என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அதில் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால், பெட்ரோல் நிலையத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசி போட முகாம் அமைத்து தடுப்பூசி போட்டு அனுப்பினார்.

மேலும், பெட்ரோல் பிங் வரும் அனைவருக்கும் சான்றிதழ் சோதனை செய்து, போடாதவர்களுக்கு தடுப்பூசி போட உத்தரவிட்டார். அதேபோல், தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் பெட்ரோல் கொடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccine must in petrol bunk


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal