துப்பாக்கி குண்டுகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் செயல் தலைவர்..!
Congress Executive Chairman Mayura Jayakumar Chennai airport Gun Bullets
சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் 17 துப்பாக்கி குண்டுகளுடன் காவல் துறையினரின் விசாரணை வட்டத்தில் உள்ளார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்வதற்காக விமான பயணிகள் உடமைகளை ஆய்வு செய்கையில், அதில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கைப்பையில் 7 பாயிண்ட் அளவுள்ள 5 mm ரக துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளது.

இதனையடுத்து அவரின் பயணத்தை மட்டும் ரத்து செய்த அதிகாரிகள், துப்பாக்கி குண்டுகளுடன் மயிரா ஜெயக்குமாரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் காவல் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இந்த துப்பாக்கி குண்டுகளுக்கான துப்பாக்கி தன்னிடம் உள்ளது என்றும், இதற்கான உரிமம் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த கைப்பையை தவறுதலாக எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதனை காவல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டாலும், இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Congress Executive Chairman Mayura Jayakumar Chennai airport Gun Bullets