தமிழகத்தில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு.!! எகிற போகும் கரண்ட் பில்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டண நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு  மின்சார பயன்பாடு குறைவாக இருக்கும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 5 முதல் 20% வரை மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் எனவும்,

அதே நேரத்தில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 20 முதல் 25 சதவீதம் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின் கட்டண முறையானது 10 கிலோ வாட் மற்றும் அதற்கு அதிகமான தேவை கொண்ட வணிகம் மற்றும் தொழில் முறை நுகர்வோர்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட உள்ளது.

எனினும், வீட்டு நுகர்வோர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது எனவும், விவசாயம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். அதேபோன்று வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும் ஒரு யூனிட்டுக்கு, 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயரும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

commercial electric bill hike in Tamil Nadu from today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->