ஈரோடு அருகே சோகம்.! கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி.!
College student drowned in well in erode
ஈரோடு மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கஞ்சநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி (38). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார். இவரது மகன் பாரதி (19) சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில், பாரதி தனது கல்லூரி நண்பரான பரணி (19 என்பவருடன் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது இருவரும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது பாரதி நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து பரணி சத்தம் போட்டு உள்ளார். இதைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாரதியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே பாரதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College student drowned in well in erode