சனாதன ஒழிப்பு திடீர் வாபஸ்! திரு.வி.க கல்லூரி முதல்வரின் புதிய சுற்றறிக்கையால் அதிரும் திருவாரூர்! - Seithipunal
Seithipunal


திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் திமுக சார்பில் நடைபெறும் சனாதன ஒழிப்பு கருத்தரங்கில் சனாதனம் ஒழிப்பு குறித்து பேசுமாறு கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுவதாக திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிவிப்பு!

கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை கொசு, டெங்கு, மலேரியா, போன்று ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி சனாதனம் குறித்தான கருத்தரங்கு திமுக சார்பில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் திராவிட கழக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞருமான மதுவந்தனி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

இந்த நிலையில் திரு வி.க அரசு கல்லூரி மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சனாதனம் ஒழிப்பு குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கல்லூரியின் அனைத்து துறை தலைவர்களுக்கும் பொறுப்பு முதல்வர் ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

சனாதன ஒழிப்பு குறித்து மாணவிகளை பேச வருமாறு கல்லூரியின் முதல்வரே அழைப்பு விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக கல்லூரி முதல்வர் ராஜாராமன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் சனாதன ஒழிப்பு என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிராக பேசுமாறு சுற்றறிக்கை அனுப்பி கல்லூரி முதல்வர் மதபோதகர் போன்று செயல்படுவதை கண்டிக்கத்தக்கது.

அவரை கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து விலக்கக் கோரி செப்டம்பர் 15 அன்று நாளை 3 மணி அளவில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் முன்பு கல்லூரி முதல்வரை கண்டித்து தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்த நிலையில் கல்லூரியில் பொறுப்பு முதல்வர் ராஜாராமன் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் சனாதன தர்மம் குறித்து கல்லூரி மாணவிகள் முதலில் அனுப்பப்பட்ட சுற்று அறிக்கையின் அடிப்படையில் அல்லாமல் தங்களின் சொந்த கருத்துக்களை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் தெரிவிக்கலாம் என இரண்டாவது சுற்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது கல்லூரி மாணவிகளை நேரடியாக சனாதன எதிர்ப்பு குறித்து பேச வருமாறு அழைக்காமல் மறைமுகமாக அழைப்பது போல் உள்ளதாக இணையதள வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college principal circular regarding sanatana abolish was withdrawn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->