"எப்போதும் உங்களுக்குள் பிரச்சனை"... மனமுடைந்த கல்லூரி மாணவி விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


குரோம்பேட்டையில் பெற்றோர்கள் சண்டையால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ஜனபிரியா (19) பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஜனபிரியாவின் பெற்றோர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து வழக்கம் போல் நேற்று காலையும் பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த ஜனாபிரியா மனவேதனை அடைந்து, உங்களால் நான் வெளியே தலை காட்ட முடியவில்லை, எப்பொழுதும் உங்களுக்குள் பிரச்சனை என்று கூறிவிட்டு வீட்டில் இருந்த எஞ்சின் ஆயிலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சடைந்து உடனடியாக தீயை அணைத்து ஜனபிரியாவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜனபிரியா உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College girl commits suicide by fire set himself in chromepet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->