திருமதி தென்னிந்திய அழகி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து கோவை பெண் சாதனை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் பேகாசஸ் குளோபல் நிறுவனம் சார்பில் திருணமான பெண்களுக்கான திருமதி தென் இந்திய அழகிப்போட்டி நடைபெற்றது. 

இந்தப் போட்டிக்கு தென் இந்திய மாநிலங்களிலிருந்து திருமணமான பெண்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்று இறுதிச்சுற்றுக்கு பதினான்கு போட்டியாளர்கள் தேர்வானார்கள். அவர்களில், கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து ஷாலு ராஜ் திருமதி தென் இந்திய அழகி போட்டியில் இரண்டாவது இடத்தையும், திருமதி தமிழ்நாடு அழகி போட்டியில் முதலிடமும் பிடித்து திருமதி தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார். 

மேலும் அவர், பன்முக ஆளுமை திறன் கொண்டதற்காக திருமதி நல்ல உடல் கட்டமைப்பு, திருமதி திறமைசாலி மற்றும் திருமதி நம்பிக்கைக்குாியவர் உள்ளிட்ட பல விருதுகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு "தங்க கிரீடம்" சூட்டப்பட்டது. 

இது தொடர்பாக, ஷாலு ராஜ் தெரிவித்ததாவது, "நான் சொந்தமாக காபி ஷாப் ஒன்று நடத்தி வருகிறேன். எனது காபி ஷாப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை பணியாளராக நியமித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து வருகிறேன். எனது கணவர் ராஜ்சிவானந்தம். 

எனக்கு நான்கு வயதில் ஆரின் ஆதியா என்ற மகன் உள்ளார். நாட்டில் திருமணமான பெண்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்காமல் ஏதாவது ஒன்று சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். 

அந்த போட்டியில், வெற்றி பெற்று சாதித்துள்ளேன். இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு எனது குடும்பத்தினர் மிகவும் ஒத்துழைப்பு வழங்கினா் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coimbatore woman won second place in mrs south india competition


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->