குட் நியூஸ்... வணிகவரித்துறையில் 1,000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு..!! - முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!
CM Stalinorder to promote 1000 employees in commercial tax dept
தமிழக அரசுக்கு வணிகவரி துறையின் மூலமாக இந்த ஆண்டு 12,500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் வணிகவரித்துறை மூலம் தமிழக அரசுக்கு வருவாய் பெருக்குவதற்கு 1,000 உதவியாளர்களுக்கு துணை வணிகவரி அலுவலர்களாகவும், வணிகவரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு ஒரே அரசாணையில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே வணிகவரித்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படும். அதன் மூலம் வணிகவரித்துறையின் வருவாயை பெருக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்றத்தில் வணிகவரித்துறை மானிய கோரிக்கையின் பொழுது அறிவித்திருந்தார்.
அந்த வகையில் வணிகவரி துறையில் ஒரே அரசாணையில் 1,000 பேருக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நிதி ஆண்டில் தமிழக அரசுக்கு வணிகவரித்துறை மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பு ஆக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்டதில் வணிகவரித்துறை அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
CM Stalinorder to promote 1000 employees in commercial tax dept