காதல் திருமண வழக்கு: வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமை - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Rights intercaste marriage Delhi High Court
வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் தனிநபர் உரிமை (Individual Right) என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பதினொரு ஆண்டுகளாகக் காதலித்து வந்த வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்கள் திருமணத்திற்கு இரு குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி, டெல்லி காவல்துறையின் பாதுகாப்பைக் கோரினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, திருமணம் செய்துகொள்ளும் வயது வந்தவர்களின் விருப்பத்தைத் தடுக்க குடும்பமோ, சமூகமோ உரிமை இல்லை என்று கூறி, அந்தத் தம்பதிக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவிக்கையில், "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-இன் கீழ், ஒருவரது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது என்பது தனிமனிதச் சுதந்திரத்தின் ஓர் அங்கமாகும். இந்தியச் சமூகத்தில் சாதி இன்றும் வலுவான சமூகச் செல்வாக்கைக் கொண்டிருந்தாலும், சாதி மறுப்புத் திருமணங்கள் (Inter-caste Marriages), சாதியப் பாகுபாட்டை பலவீனப்படுத்தி, சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகின்றன" என்று வலியுறுத்தினார்.
English Summary
Rights intercaste marriage Delhi High Court