மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம்!
CM STALIN ANNOUNCE 03052023
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் இன்று (3-5-2023) நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த திருமயம் தாலுகா, கே.புதுப்பட்டியைச் சேர்ந்த திரு.சுப்ரமணியம், த/பெ.கந்தன் ஆசாரி (வயது 30) என்பவர் எதிர்பாராத விதமாக மாடுமுட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM STALIN ANNOUNCE 03052023