நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுவிட்டது - முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான  நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. 

அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்பதாலும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதாலும், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் காரணமாக சொல்லப்பட்டுள்ளது. 

மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.  

தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். 

இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான்.  அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் சுட்டி கட்டியிருந்தார்.

இந்நிலையில், கட் ஆஃப் மதிப்பெண் நீக்கப்பட்டதன் மூலம் நீட் தேர்வே அர்த்தமற்றதாகிவிட்டது என்று, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுவிட்டது.

நீட் தேர்வு என்பதே பயிற்சி மையங்களுக்கும், தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்துவது என்பதாகி விட்டது" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MKStalin Say About NEET PG Cut Off Mark


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->