ஆஸ்காரை வென்று குவித்த நாட்டு நாட்டு பாடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


இன்று அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் டால்பி தியேட்டரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இந்திய சார்பில் சிறந்த பாடலுக்கான விருதை ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், சிறந்த ஆவணபடத்திற்கான விருதை 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' என்ற படமும் வென்றுள்ளது. 

இதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

"ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை ஆர் ஆர் ஆர் 'நாட்டு நாட்டு' பாடல் பெற்று வரலாறு படைத்துள்ளது. இந்த மகத்தான சாதனையை படைத்த இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இதேபோல், முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆஸ்கர் வென்றதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். முதன் முறையாக இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி வேறு எதுவும் இல்லை. அனைத்து விருதிற்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM mk stalin wishes to nattu nattu song and the elephant whisperers for won osacar award


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->