தருமபுரி வருகிறார் தமிழக முதல்வர் - எப்போது தெரியுமா?
cm mk stalin coming 17th come in dharumapuri
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் வருகிற 16-ந் தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்து அங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு அன்று இரவு தருமபுரிக்கு வருகிறார். அவருக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவர் அங்கிருந்து "ரோடு ஷோ" நடத்தி முடித்துவிட்டு அன்று இரவு தருமபுரி சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 17-ந் தேதி காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் இருந்து ஒட்டப்பட்டி, கற்கஞ்சிபுரம் வழியாக பி.எம்.பி. கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள நிகழ்ச்சி நடக்கும் திடல் வரை "ரோடு ஷோ" நடத்துகிறார்.

அதை முடித்து விட்டு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு, வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் திரும்புகிறார். முதல்வரின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
English Summary
cm mk stalin coming 17th come in dharumapuri