வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு – விழுப்புரத்தில் சோகம்!
Student collapses in the classroom and dies Mourning in Viluppuram
விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. வீதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 மாணவர் மோகன்ராஜ் (17) வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விராட்டிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், காலை 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். உடனே ஆசிரியர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆக்ஸிஜன் வசதி இல்லாததால், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பினர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் வகுப்பறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விசாரணையில், மோகன்ராஜ் முன்பே உடல்நலப் பிரச்சனை கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தாளாளர், “மாணவன் திடீரென மயங்கியதும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இது மிகுந்த வேதனை தருகிறது” என்று தெரிவித்தார். தற்போது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Student collapses in the classroom and dies Mourning in Viluppuram