பொய் புகார் அளிப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


 சென்னை ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்சினையில் மாமனார் மீது போக்சோவில் மருமகள் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது. 

சமீப காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.  தினசரி நாளிதழ்களை  எடுத்து பார்க்கும் போது அதில் பாலியல் தொடர்பான செய்திகள் தான் அதிகம் உள்ளது.  குறிப்பாக பெண்களை வசியப்படுத்தி ஆண்கள் தங்கள் வலையில் சிக்க வைக்கஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்து பின்னர் ஏமாற்றி விடுகின்றனர். உறவுக்கு உட்படுத்தி அவர்களை திருமணம் செய்யாமல் சில ஆண்கள் ஏமாற்றியது தொடர்பாக உள்ளது,அதுமட்டுமல்லாமல் ஒருசில பெண்கள பொய் புகார்களை கூறி  புகார் அளிப்பவர்கள்.இதனால் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.ஆகவே போக்சோ சட்டத்தை பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் சென்னை ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்சினையில் மாமனார் மீது போக்சோவில் மருமகள் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது.  8 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது தாத்தா மீது  போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விசாரணையில், கணவரின் சொல் கேட்டு மாமனார் மீது மனைவி பொய் புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது. தனது தாத்தா மீது எந்தத் தவறும் இல்லை என்றும், தாத்தா தன்னை 'பேட் டச்' செய்ததாக தந்தைதான் புகார் அளிக்கச் சொன்னார் என்றும் அந்த பெண் குழந்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மைக்குப் புறம்பாக போக்சோ சட்டத்தை பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவு 22(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police warn those who file false complaints


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->